திட்டமிடல் பிரிவு

செயற்பணி

“மேல் மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு வளங்களை உபயோகித்து நிரந்தர அபிவிருத்திக்கு இட்டுச்செல்லும் திட்டங்களை தயாரித்தல், நடைமுறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் மற்றும் மதிப்பீட்டிற்கு பங்களித்தல்.”

பணியாட்தொகுதி

தொடர்இல பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவிகள் தற்போதுள்ள அலுவலர்கள்
1 பிரதிப் பிரதம செயலாளர்(திட்டமிடல்) 01 01
2 பணிப்பாளர்(திட்டமிடல்) 01 01
3 உதவிப் பணிப்பாளர்(திட்டமிடல்) 09 09
4 புள்ளி விபரவியலாளர் 01 01
5 அபிவிருத்தி உத்தியோகத்தர் 59 59
6 முகாமைத்துவ உதவியாளர்கள் 13 13
7 கணனித் தரவு பதியுநர் 01 01
8 அலுவலக உதவியாளர்கள் 05 05
9 சாரதிகள் 05 02
மொத்தம் 94 91

மாகாண திட்டமிடல் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளும் கடமைகளும்.

  1. திட்டமிடுதலுக்கான அடிப்படையான ஒழுங்கான அமைப்பு ரீதியிலான தகவல்களை மேம்படுத்துவதற்கு உரிய தகவல்களைச் சேகரித்தல்,ஒழுங்கான முறையில் ஒழுங்குபடுத்தபட்டதாகப் பேணுதல் மற்றும் பகுப்பாய்வு, அதன் ஊடாக பிரச்சினைகளை இனங்காணுதல், தீர்வுகளைத் தேடுதல், மாற்றுவழிகளை நிரற்படுத்தி சிறந்த தீர்வினை எடுப்பதற்கு  ஒத்துழைப்பு நல்குதல்.
  2. உறுதியான நோக்கம் மற்றும் குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்ட மத்தியகால மாகாண அபிவிருத்தித் திட்டம் ஒன்றினைத் தயாரித்தல்.
  3. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியங்களினால் நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்றிட்டப் பிரேரணைகளைத் தயாரித்தல் நடைமுறைப்படுத்தல்
  4. அபிவிருத்தியின் போது தனியார் பிரிவின் மற்றும் சமூக இயக்கங்களின் பங்களிப்பிற்காக வசதிகளை ஏற்படுத்துதல்.
  5. புதிய செயற்திட்டங்கள்/ நிகழ்ச்சித்த்திட்டங்களை இனங்காணுதல், நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  6. நடைமுறையிலுள்ள செயற்றிட்டம்/ நிகழ்ச்சித்திட்டம், மேற்பார்வை, இணைப்பு நடவடிக்கை மற்றும் செயற்றிட்டங்களின் பலாபலன்களை மதிப்பீடு செய்தல்.
  7. மாகாண,மாவட்ட,மற்றும் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தாபனங்களின் திட்டமிடல் இயலுமையினைக் கட்டியெழுப்புதல்.
  8. திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் தொழிநுட்ப உதவிக்காக நிதி ஆணைக்குழு மற்றும் தேசிய திட்டமிடல்  திணைக்களத்துடன் தொடர்பினை ஒழுங்கு படுத்துதல்.
  9. பொதுவான மாகாண அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்பாடுத்துவதற்கு உரியதான மற்றும் அந்த அந்த கூறு / துறைக்கு உரியதாக இனங்காணப்பட்டுள்ள முக்கியதேவைகள் மற்றும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு எல்லா அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் தாபனங்களுக்கு உதவுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய எல்லாத் திட்டமிடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
  10. திட்டமிடல் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின் ஊடாக எல்லாக் கூறுகளுக்கமுரியதாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விரிவான பிரிவு ரீதியான திட்ட அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அவ்வத்துறையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை வழிநடத்துதல்.
  11. வருடாந்த நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் போது அவ்வாறு இனங்காணப்படும் வேலை விடயங்கள் மத்தியகால திட்டத்தின் (Agency Result Framework)எதிர்பார்த்த இலக்கு, எதிர்பார்ப்பு மற்றும் பலாபலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நேரடியாக பங்களிக்கும் மற்றும் அதற்கு உரியனவாகுவதுடன், அதிகமானோருக்கு பயன்படும் மற்றும் வினைத்திறனுள்ளதான நடவடிக்கைக்காக எவ்வேளையிலும் முன்னுரிமை வழங்குதல் மற்றும் ஏற்பாட்டினை ஒதுக்கிக்கொடுப்பதை அங்கீகரித்தல்.
  12. முழு நோக்கத்தினையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒருங்கிணைந்து மற்றும் பங்குபற்றலுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தல்.
  13. திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரியதாக உத்தியோகத்தர்களுக்கிடையே விடய நடவடிக்கை மற்றும் பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் அதற்கு உரிய தாபன அமைப்பினை ஸ்தாபித்தல்,மாகாணதிட்டம், இணைந்த திட்டம்,பங்காளிகளின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற முறையில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் மற்றும் கிராமிய மட்டத்தில் நடைமுறைத்திட்டம் மற்றும் நடைமுறைபடுத்தும் வழிகாட்டல் அமைப்பினை ஸ்தாபித்தல்.
  14. தொடர்ச்சியான மீள்பார்வை நடவடிக்கை மற்றும் மதிப்பீட்டுச் செயற்பாட்டினை மேற்கொள்ளல்.