மாகாண திட்டமிடல் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ள அலுவல்களும் கடமைகளும்.

  • பிரச்சினைகளை அடையாளம்காணல், திட்டமிடலுக்கு அடிப்படையாகும் நாளதுவரைப்படுத்திய கட்டமைவு தகவல்களுக்கு ஏற்புடையதாக தகவல்களை திரட்டுதல், தினந்தோறும் நாளதுவரைப்படுத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் முதன்மைகளின் அடிப்படையில் சிறந்த மாற்று தீர்வினை தெரிவுசெய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி தீர்வுகளை காணல்.
  • விசேட நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு பொருளாதார ரீதியாக நன்மைபயக்கும் நோக்குடன் கூடிய இடைக்கால வருடாந்த மாகாண அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்தல், துறை சார்ந்த திட்டமிடல், வருடாந்த செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை அதனூடாக ஏற்படுத்தல்
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியங்களின் மூலம் வழிநடாத்த முடியுமான கருத்திட்டப் பிரேரணைகளை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
  • அபிவிருத்தி செயற்பாட்டுக்காக தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகள் என்பவற்றுக்கு வசதிகளை அளித்தல்
  • இயற்கை வளங்களை தொடர்ச்சியாக நுகர்வு செய்தலை முகாமைத்துவம் செய்தல், சூழலுடன் நெகிழ்வான தாக்கங்களையும் பயன்களையும் பரிசோதனை செய்தல்
  • புதிய கருத்திட்டங்கள் ஃநிகழ்ச்சித்திட்டங்களின் பெறுமதி மற்றும் அளவு என்பன மதிப்பிடல்