
காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் மற்றும் இடர் அபாயக் குறைப்பு குறித்த பங்குதாரர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் – களுத்துறை மாவட்டம்
மாகாண சபைகளின் அதிகார வரம்பிற்குள் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், மாகாண காலநிலை மாற்ற தழுவல் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், மாகாண அபிவிருத்தி திட்டமிடலில் காலநிலை மாற்றத்தை உள்ளடக்குவதற்கும் ஒரு வலுவான நிறுவன கட்டமைப்பை உருவாக்க மேல் மாகாண சபையில் ஒரு மாகாண காலநிலை சபை மற்றும் ஒரு மாகாண காலநிலை அலகு இவ்போது நிறுவப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில், காலநிலை மாற்ற இயைபாக்கம் மற்றும் இடர் அபாயக் குறைப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் போது, அதன் புவியியல் பண்புகள் காரணமாக வெள்ளம் மற்றும் பிற பேரிடர்களுக்கு அதிக வாய்ப்புள்ள களுத்துறை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டது.
இதன் படி;
- பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவில் மரகஹதெனிய விவேகானந்தா தமிழ் கனிஷ்ட பாடசாலை மற்றும்
- புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவின் யடகம்பிட்டிய கனிஷ்ட பாடசாலை,
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காலநிலை மாற்ற இ யைபாக்கம் மற்றும் இடர் அபாயக் குறைப்பு குறித்து அறிவுறுத்திவதற்காக, பாடசாலை இடர் முகாமைத்துவக் குழுக்கள்/அரசு நிறுவனங்களின் அதிகாரிகள்/பெற்றோர்கள் மற்றும் சமூக அடிப்படையிலான சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்புடன் 2024.11.05 மற்றும் 2024.10.07 ஆகிய திகதிகளில் இரண்டு பாடசாலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான பல முதற்கட்டக் கூட்டங்கள்
ஒக்டோபரில் மேல் மாகாண சபை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. இந்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான காரணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.