
காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு குறித்து பங்குதாரர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் – களுத்துறை மாவட்டம்
கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி உத்திகள்
மேல் மாகாணத்தில், காலநிலை தாக்கத்திற்கு மாற்றியமைத்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, பேரிடர்களுக்கு அதிக வாய்ப்புள்ள போக்கைக் கொண்ட களுத்துறை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டது
அதன்படி;
- பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவின் மரகஹதெனிய விவேகானந்தா தமிழ் கனிஷ்ட கல்லூரியின் மற்றும்
- புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவின் யடகம்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின்
பாடசாலை மாணவர்கள்/ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பிரதேச மக்களுக்கு காலநிலை மாற்றங்களுக்கு இயைபாக்க அ டைதல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பாக அறிவுறுத்துவதற்காக 2024.11.05 மற்றும் 2024.10.07 ஆந் திகதிகளில் குறித்து அறிவுறுத்தல் மேல் மாகாண வானிலை ஆய்வுப் பிரிவால் அதன் பங்காளி நிறுவனங்களின் வளங்களைப் பயன்படுத்தி இரண்டு பாடசாலையில் நிகழ்ச்சி திட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கு இணைந்த வகையில் , காலநிலை மாற்றங்களுக்கு இயைபாக்க அ டைதல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கு நேரடியாகப் பங்களிக்கும் கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி குறித்து மேற்கூறிய பாடசாலைகளின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு
அறிவுறுத்தும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் 2024.11.19 ஆந்திகதி நடத்தப்பட்டன.
இங்கு;
- கழிவு முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்.
- பாடசா லைச் சூழலில் கழிவு முகாமைத்தும் மற்றும் கழிவு வேறாக்கலின் அவசியம்.
- பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்களை உருவாக்குதல்.
- கழிவுகளைப் பணமாக மாற்றும் மீள்சுழற்சி உத்திகள்
ஆகிய விடயங்கள் தொடர்பாக பாடசா லை மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் (தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி). திருமதி ஆர் சண்முகப்பிரியா மற்றும் களுத்துறை மாவட்ட நிர்வாகி திருமதி நிரஞ்சா ஜெயசேனா ஆகியோர் பாடசா லை மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கினர்
இங்கு, கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மாணவர்களை சுறுசுறுப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஈடுபடுத்துவதற்காக, அவர்களுக்கு வினாக்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.