வகிபாகம்:
- மாகாணத்தில் சமநிலையான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான உத்திகளை வகுத்தல்.
- தேசிய அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் மாகாண அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைதல்.
- வரையறுக்கப்பட்ட வளங்களுடன் அதிகபட்ச செயல்திறனை அடைய திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் திட்டங்கள் / நிகழ்ச்சித் திட்டங்களை முகாமைத்துவம் செய்தல்.
நோக்கங்கள்:
- தேசிய அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் கிராமிய பிரதேச மற்றும் மாகாண மட்டத்தின் பங்களிப்புடன் மாகாண அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல்.
- குறிப்பிட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் பொருளாதார இடஞ்சார்ந்த நோக்குடன் ஒரு மத்தியகால மாகாண அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல், அதனூடாக துறைசார் திட்டங்கள் மற்றும் வருடாந்த நடைமுறைத் திட்டங்களைத் தயாரித்தல்.
- நிறுவன முடிவுகளின் கட்டமைப்பிற்கு ஏற்ப ஆண்டிற்கான நடைமுறை செயல் திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்துதல், முன்னேற்றத்தை மதிப்பிடுதல் மற்றும் எதிர்பார்த்த இலக்குகளை அண்மித்தல்.
- பல்வேறு நிதியகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாகாண அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல், முன்னேற்ற மதிப்பீடு மற்றும் இலக்குகளை அண்மித்தல்.
- துறைசார் திட்டங்கள் மற்றும் நிறுவனத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அதற்கான நிறுவனங்களுக்கு ஒத்துளைப்பு நல்குதல்.
- மாகாண சபை உறுப்பினர்களின் திட்ட முன்மொழிவுகளை திறம்பட நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- வெளிநாட்டு நிதியத்தில் செயல்படுத்தக்கூடிய திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான வசதி வேலைத் திட்டத்தை தயாரித்தல்.
- திட்டமிடுதலுக்கான அடிப்படையாக நன்கு கட்டமைக்கப்பட்ட தகவலை மேம்படுத்த, தொடர்புடைய தகவல்களைச் சேகரித்தல், முறையாகப் புதுப்பிக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யதல்.
- கொள்கை உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக நிதி ஆணைக்குழு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு நடவடிக்கை.
- திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயல்முறைக்கு உரிய வகையில் அதிகாரிகளிடையே பணிகள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனக் கட்டமைப்பு, மாகாண திட்டங்கள், துறைசார் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களை நிறுவுதல் மற்றும் மாகாணத் திட்டங்கள், துறைசார் திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக பிரதேச செயலக மட்டத்திலும் கிராம மட்டத்திலும் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அமைப்பை நிறுவுதல்.
- ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துதல் மற்றும் தொடர்ச்சியான மீள்பார்வை மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்ளுதல்.
- ஒட்டுமொத்த நோக்கங்களை அடைய இணைந்து மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுதல்.