
அரசு நிர்வாகத்தை வலுப்படுத்தும் திட்டம் Strengthening Governance Program (SGP)
இலங்கையில் பல்வேறு நிர்வாக நிலைகளில் நிர்வாக கட்டமைப்புகளின் செயல்திறன், சம சந்தர்ப்பம், சமூக நெருக்கடிகளுக்கு மீள்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. தேசிய உத்திகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு
இடையிலான பொருந்தாத தன்மை, தேசிய மற்றும் பிராந்திய திட்டமிடல் கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் உள்ள இடைவெளி, பல்வேறு திறன் கட்டுப்பாடுகள் காரணமாக பங்கேற்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் உள்ள வரம்புகள், சமூகத் தேவைகளுடன் ஒப்பிடும்போது வள விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு, பாலின சமத்துவம் மற்றும் சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சவால்களை நிவர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது 2028 மே வரை ஐந்து ஆண்டுகளுக்கு இந்த (SGP) நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த அரச நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் (SGP) மூலம்,இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய நோக்கங்களுக்கு இணங்க, அரச குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நிர்வாக சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மேல் மாகாண சபைக்கு எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விளைவுகளாவன;
- தரவு மற்றும் ஆராய்ச்சியின் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கும் மிகவும் சாதகமான கொள்கைகளை வகுப்பதற்கும் ஆட்சியின் திறனை மேம்படுத்துதல்.
- சட்டமன்ற மற்றும் ஒழுங்குமுறை திறன்களை வலுப்படுத்துதல்
- பிராந்திய மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் வரவு செலவுத்
திட்டம் - சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பாலின சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள்
கிடைப்பதற்கான அணுகுமுறைகளை ஒருங்கிணைத்தல்
அரச நிர்வாகத்தை வலுப்படுத்தும் நிகழச்சித்திட்டத்தின் கீழ், ஆசிய அறக்கட்டளையினால் , மேல் மாகாண சபையின் பிரதம செயலாளரின் தலைமையிலும் சிரேஷ்ட ஊழியர்களின் பங்கேற்புடனும், அடையாளம் காணப்பட்ட கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு சுருக்கமான பணித் திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைப் பட்டறை 2024 ஜூன் 28, அன்று கொழும்பில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் நடத்தப்பட்டது.
மேற்கண்ட பட்டறையின் முடிவுகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த இலக்குகளை செயல்படுத்த ஆசிய அறக்கட்டளை மற்றும் மேல் மாகாண சபைக்கும் இடையிலான கூட்டாண்மையை எளிதாக்கும் நோக்கத்துடன் இரு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்புடன் செயல்பட 2024 செப்டம்பர் 18 ஆந்திகதி மேல் மாகாண சபையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ் அடையாளம் காணப்பட்ட செயல்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு வசதியாக ஒரு மாகாண வழிகாட்டுதல் குழு (Provincial Steering Committee ) நிறுவப்பட்டது, மேலும் அதன் இரண்டாவது கூட்டத்தைத் தொடர்ந்து, தற்போது தயாரிக்கப்பட்ட சுருக்கமான பணித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை மன்றக் கல்லூரியில் 2024 செப்டம்பர் 18, ஆந்திகதி மாலை ஒரு வேலை்த்திட்டம் நடைபெற்றது.