காலநிலை மாற்றத்தின் மூலம் இடம் பெறும் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் – மேல் மாகாண வேலைத்திட்டம் 2025.01.30 மற்றும் 2025.01.31

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் தீவிர வானிலை நிலைமைகளால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் ஆறுகள் மற்றும் நீர் ஆதாரங்களில் உப்பு மாசுபாடு போன்ற சூழ்நிலைகளுக்கு மக்கள் தொடர்ந்து முகம் கொடுக்கின்றனர், மேலும் துபோன்ற நிகழ்வுகள் மாகாணத்தின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவானதல்ல.

மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களைக் குறைக்க, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இ யைபாக்கமடைவது அவசியம். இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, தேசிய திட்டமிடல் திணைக்களம், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஒரு தேசிய ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காகத் தேவையான யோசனைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்காக மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஒரு வேலைத்திட்டம், பிரதம செயலாளரின் பங்கேற்புடன், 2025 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பு 03 இல் உள்ள அமாரி ஹோட்டலில் நடைபெற்றது.

பொதுத்துறை சார்பாக மாகாண கல்வி, உள்ளூராட்சி, சுகாதாரம், விவசாயம் மற்றும் வீதிகள் அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தப் வேலைத்திட்டத்தில் பங்கேற்றனர். மேலும், மாவட்ட செயலகம், பொறியியல் பணியகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், வங்கி, நிதி மற்றும் காப்பீடு, தகவல் தொடர்பு, விவசாய பொருட்கள், கட்டட கட்டுமானம், சுற்றுலா, மருத்துவமனைகள், மீள்சுழற்சி, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்க ளைஅங்கத்துவப்படுத்தி அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.

பின்வரும் அதிகாரிகள் வேலைத்திட்டத்திற்கு வள வாளர்களாக தமது பங்களிப் பை
வழங்கினனர்.

  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் இடர் முகா மைத்துவ ஆலோசகர் – திரு ரோஹன் டி கூரே
  • விவசாய/காலநிலை விஞ்ஞானி மற்றும் முன்னாள் தலைமை விஞ்ஞானி (Argo-Climatology), விவசாயத் திணைக்களம் – டாக்டர் ரஞ்சித் புண்யவர்தன
  • நகர திட்டமிடல் நிபுணர் – பேராசிரியர் ஜகத் முனசிங்க
  • நீர், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீர்ப்பாசன நிபுணர் – பொறியியலாளர் திருமதி ஜானகி மீகஸ்தென்ன
  • சுற்றுச்சூழல் சுற்றுலா நிபுணர் – டாக்டர் சமந்தா பதிரத்ன